2022 ஜூலை 04, திங்கட்கிழமை

அட்டுலுகம சிறுமி விவகாரம்: சி.ஐ.டி விசாரணை

Editorial   / 2022 மே 29 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27)  ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை  சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .