2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

பக்தாத்தில் குண்டு வெடிப்பில் 35 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 20 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள சன நெருக்கடியான சந்தை ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குறைந்தது 35 பேரைக் கொன்றதுடன், 60 பேரைக் காயப்படுத்தியுள்ளார்.

ஹஜ் பெருநாளுக்கு முன்னதாகவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில், பெரும்பாலான கொள்முதலாளர்கள் பண்டிகைக்கு முன்பதாக உண்வை வாங்குபவர்களால் சந்தை நிறைந்துள்ளது.

இந்நிலையில், காயமடைந்த சிலர் கவலைக்கிடமாக இருக்கின்ற நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் சிறுவரும், பெண்களும் உள்ளடங்குவதோடு, சில கடைகள் தாக்குதலில் எரிந்துள்ளன.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .