2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

ஒட்டுமொத்த உலகமும் தேடியது இதைத்தான்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

FIFA 2022  உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில்  கோலாகலமாக ஆரம்பமாகி நேற்று முன்தினம்(18) நிறைவடைந்தது.

அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை  வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி சம்பியனானது.

இப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான காற்பந்து ரசிகர்கள் நேரில் சென்றும் தொலைக்காட்சியிலும்,சமூக ஊடகங்களிலும் பார்வையிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் உலகக் கோப்பை காற்பந்துப்  போட்டியை தான் ஒட்டுமொத்த உலகமே கூகுளில் தேடியுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது உலக கோப்பைக் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி குறித்த தேடல் தான் கடந்த 25 ஆண்டுகளில் அதிகமான டிராபிக்கைப்  பதிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X