Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண விழாக்களில் விருந்தினர்களை வாடகைக்கு எடுக்கும் விநோத நடைமுறை தென் கொரியாவில் காணப்படுகின்றது.
திருமணவிழாவில் அதிகமானவர்கள் கலந்துக் கொள்வது சமூகத்தில் தமது பெருமையை மேலும் அதிகரிக்கும் என்பதற்காகவே அந்நாட்டு மக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்தப்படுபவர்கள், சிறப்பாகத் தங்களை அலங்கரித்து விழாவில் கலந்து கொள்வார்கள் எனவும், அதற்கான பணத் தொகையும் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் மணமக்களின் மிக நெருங்கிய உறவினர்கள் போல் நடந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் திருமண விருந்திலும் கலந்து கொள்ளலாம் எனவும், ஆனால் மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
போலி விருந்தினர் ஒருவருக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் 20 அமெரிக்க டொலர்கள்(இலங்கை மதிப்பில் சுமார் 4000 ரூபா ) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025