2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

மனித எலும்புகளை விற்பனை செய்யும் இளைஞர்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் 21 வயதான ஜோன் பெர்ரி (Jon Ferry) எனும் இளைஞர் மனித  எலும்புகளையும், மண்டையோடுகளையும்   விற்பனை செய்யும் விநோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இது குறித்து டிக் டொக் செயலியில்  காணொளியொன்றை வெளியிட்ட அவர்” தனது வீட்டிலேயே மனிதனின் மண்டை ஓடு, கை, கால் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் போன்றவற்றை வரிசையாக அடுக்கி வைத்து விற்பனை செய்வது போன்று  பதிவிட்டுள்ளார்.

அதிலும் ஒவ்வொரு எலும்பையும் காட்டி அதுகுறித்த அறிவியல் பூர்வமான தகவலையும் கூருகிறார். இதனை அடுத்து அதன் விலையையும் குறிப்பிடுகிறார். இதுவரை ஐந்து லட்சம் பேர் இவரைப் பின்தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சிலர் சமூக வலைத்தளங்களில் இது போன்று செய்வது நியாயமா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.

இதற்கு அவர் விளக்கம் அளிக்கையில்  “பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் எலும்பியல் நிபுணர்களே அதிக அளவில் வாங்குகின்றனர். அவர்கள் தங்களது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகவே  எலும்புகளை வாங்கிச் செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.


எனினும் அவர் எவ்வாறு எலும்புகளைப் பெற்றுக்கொள்கின்றார் என்பது குறித்த தகவல்கள்  வெளியாகவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X