Princiya Dixci / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கடற்கரையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (22) காலை உருக்குலைந்த நிலையில் கிடந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகக் களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அரியக்குட்டி சிறிஸ்கந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கடந்த 07ஆம் தியதியன்று அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 13.04.2016 இவர் காணாமல் போனமை தொடர்பில் களுவாஞ்சிகுடிப் பொலிஸில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (22) ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
01 Feb 2026