Editorial / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் ஆயுதக் குழுவினர் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (23) மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதம் தாங்கிய குழுவினர் வான் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர், அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது அவர்கள் மீது, ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆயுததாரிகள் இருந்த வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025