2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முன்னாள் பெண் உறுப்பினர் கடத்தல்

Kanagaraj   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம நகர சபையின் முன்னாள் உறுப்பினரான யமுனா காந்தி (வயது 38) என்பவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.

வெலிகம, கப்பரதொட்ட ஹோட்டலுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் சென்றிருந்த இனந்தெரியாதவர்களே, ஹோட்டலின் உரிமையாளரான முன்னாள் உறுப்பினரை கடத்திச்சென்றுள்ளனர்.

கத்திகளை காண்பித்து அச்சுறுத்தி, ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் இருவரையும் கட்டிவைத்துவிட்டே அதன் உரிமையாளரான பெண்ணை கடத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .