2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுவர் இல்ல சிறுமியர் 12பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பாதுகாவலர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 25 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மாவனெல்லை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த 5 சிறுமிகள் மற்றும் எஹலியகொட பிரதேச சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 7 சிறுமிகள் உட்பட 12 சிறுமிகளை  பாலியல் வல்லுறரவிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சிறுவர் இல்ல பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேகநபரி;ன் நடவடிக்கைக்கு துணைபோனதாகக் கூறப்படும் பெண் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரும் இன்று மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0

  • ibnuaboo Wednesday, 25 July 2012 02:36 PM

    இது என்ன ஸ்ரீலங்கவா இல்ல ரேப் லங்காவா. மரண தண்டனை அமுல்படுத்துவதற்கிடையில் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கற்பழிப்பு பாலியல் துஷ்பிரயோகங்களில் காமுகர்கள் அவசரம் காட்டுகிறார்கள் . அரசு எப்போது மரனதன்டை சட்டத்தை அமுல்படுத்தப்போகிறது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .