2025 ஜூலை 17, வியாழக்கிழமை

15 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய நபர் கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன் 

15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் பணிபுரியும் நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், கடந்த 2ஆம் திகதி பகல் வேளையில் வவுனியா நகருக்குச் சென்றபோது, பத்திரிகையொன்றை வாங்குவதற்காக மேற்படி சிறுமியை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிச் சென்று மதவாச்சி நாவக்குளம் பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

குறித்த நபர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு தொகை பணம் கொடுத்துள்ளதோடு விகாரையில் கடமை புரிந்து கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரிடம் சிறுமியை பஸ்ஸொன்றில் ஏற்றிவிடுமாறும் கூறியுள்ளார்.

சிறுமியிடம் விகாரைக்கு வந்த காரணத்தை சிவில் பாதுகாப்பு படை வீரர் வினவியபோது நடந்த உண்மையை சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதகாரி பொலிஸ் பரிசோதகர் பீ. எம். ஏ. திஸாநாயக்காவின் ஆலோசனைப்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X