2025 ஜூலை 23, புதன்கிழமை

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 21 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ளூர்த் துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்.

இந்நபர் பொத்துவில் காட்டுப்பகுதிக்கு மிருகங்களை வேட்டையாடுவதற்காக சர்வோதயபுரத்திலிருந்து உள்ளூர்த் துப்பாக்கியுடன் சென்றபோது கைதுசெய்யப்பட்டதாகவும் துப்பாக்கியுடன் 4 தோட்டாக்களும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

சந்தேக நபர் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .