2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கணவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மனைவியை கொலை செய்துவி;ட்டு தலைமறைவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படும் கணவரான சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை தாம் கைதுசெய்துள்ளதாக வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி.ஜெயசீலன் தெரிவித்தார்.

கடந்த 30.06.2012ஆம் ஆண்டு  வெருகல் கல்லறுப்பு பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த  மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் வெட்டிக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படும் இச்சந்தேக நபர்,  கடந்த 2 வாரங்களாக காட்டுப்பகுதியில் தலைமறைவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.
 
தமக்கு கிடைத்த தகவலையடுத்து இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இச்சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .