2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இனிப்பு கொடுத்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவையில், ஆறு வயது சிறுமிக்கு இனிப்புக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொகவந்தலாவை, லெட்சுமி தோட்ட மத்திய பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை  ஆறு வயதுச் சிறுமி ஒருவருக்கு இனிப்பு கொடுத்து அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 52 வயது நபர் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்படி நபர் நேற்று வியாழக்கிழமை ஹட்டன் நீதவான் நிதிமனறில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேக நபரை   எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  சிறுமி மருத்தவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .