2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம், சிரம்பியடிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கியொன்றை தங்கள் வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வேறொரு சந்தேக நபரைக் கைதுசெய்வதற்காக இப்பகுதிக்கு சென்ற புத்தளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் மோட்டார்  சைக்கிளொன்றை இடைமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது  அனுமதிப்பத்திரமின்றிய ரிப்பிட்டர் ரக துப்பாக்கியொன்றைக்   கைப்பற்றியதுடன், இரு சந்தேக நபர்களை கைதுசெய்தாகவும்; பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள புத்தளம் பொலிஸார், துப்பாக்கியுடன் சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .