2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காணாமல் போனதாக கூறப்படும் பெண் சடலமாக மீட்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 05 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு, கிண்ணயடி பகுதியிலிருந்து காணமல்போனதாக கூறப்படும் பெண்ணொருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீறாவோடை- வண்ணான்டமடு பிரதேசத்தில்  புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செல்லத்தம்பி சின்னப்பிள்ளை (வயது 39) என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மேற்படி பெண் கடந்த 3 திகதி காணமால் போனமை தொடர்பில் அவரது உறவினர்களால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பர்டு செய்யப்பட்டுள்ளது.

இனந்தெரியாதோரால் கொலைசெய்யபட்ட நிலையில் இவர் புதைக்கபட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .