2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

நுவரெலியாவில் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியாவில் பெண்ணொருவரின் சடலத்தை இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

65 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, சமரகிரி பகுதியிலுள்ள தேயிலைச் செடி பற்றைக்குள்ளிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

இச்சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லையென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .