2025 ஜூலை 21, திங்கட்கிழமை

போதைப்பொருளுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மூவரை வவுனியாவில் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

தென் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, தேக்கவத்தை பகுதியிலேயே இம்மூவரையும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 2.5 கிராம் நிறையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2.5 கிராம் நிறையுடைய போதைப்பொருள் 68 பைக்கட்டுக்களில் அடைத்து விற்பனைக்கு தயாராகவிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .