2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரித்தானியாவில் இலங்கையர் கொலை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் தெற்கு யோர்க்ஷையர் பகுதியிலேயே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்படி இளைஞர் மரணமடைந்து காணப்பட்டதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. 

கொழும்பைச் சேர்ந்த தவிஷா பீரிஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவர் கணினி மென்பொருள் கற்கையை மேற்கொள்வதற்காக 2011ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்குச் சென்று பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்தார். 

இதனைத் தொடர்ந்து தனது கல்வியை முடித்துக்கொண்ட இவர் தனது கல்வித் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பை ஒன்றை  தேடிக்கொண்டிருந்த அதேவேளை, இவர் 'டொமினோ பிட்ஸா' என்ற நிறுவனம் அடங்கலாக முழுநேர வேலையில் ஈடுபட்டுவந்தார். 

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பிரித்தானியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,  சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X