2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புசல்லாவையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.எம்.ரம்ஸீன்


புசல்லாவை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

புசல்லாவை இரட்டைப்பாதை சங்கிலிப் பாலத்திற்கு அருகிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நியுபீகொக் தோட்டத்தை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான  என்.நந்தகுமார் (வயது 38) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரட்டைப்பாதை பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் புசல்லாவை வவுகப்பிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X