2025 ஜூலை 16, புதன்கிழமை

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் செல்லத்தம்பி தங்கவேல் (68 வயது) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்  35 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனிமையிலிருந்து வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் தியாகேஸ்வரன் சடலத்தை பார்வையிட்டதுடன்,  பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணித்தார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .