Suganthini Ratnam / 2015 ஜனவரி 27 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான (வயது 46) வேலாச்சு நாகலிங்கம் என்பவர் 38ஆம் கிராம மயானத்துக்கு அருகிலிருந்து சடலமாக நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 22ஆம் திகதி வீட்டிலிருந்து இவர் காணாமல் போனதை அடுத்து, வீட்டார் இவரை தேடியுள்ளனர். அத்துடன், இவர் காணாமல் போனமை தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கும் உறவினர் முறைப்பாடு செய்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி மயானத்துக்கு அருகில் சடலம் காணப்படுவதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று தாம் சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இதற்கிடையில் சடலத்தை பார்வையிட்ட களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.எம்.ஏ.அப்துல் றியால், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவர் கடந்த சில நாட்களாக சுகவீனம் அடைந்திருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago