ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 07 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரனையிலுள்ள பேக்கரி ஒன்றுக்கு சொந்தமான லொறியை கடந்த 4ஆம் திகதி அருகில் வழிமறித்து 6 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வௌ்ளிக்கிழமை நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் ஹொரனை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் காலி, மஹகம மற்றும் புளத்சிங்கள பகுதிகளைச் சேர்ந்த 20,21,22, 27 மற்றும் 50 வயதானவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (6) நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, இவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025