Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவரும்,சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபரும் நேற்றைய தினம்(18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுப்பே-ஹிக்கடுவை பிரதேசத்தில் டீ.56 ரக சீன தயாரிப்பிலான துப்பாக்கி மற்றும் 12 ரவைகள், 1 மெகசீனுடன் 40 வயதான சந்தேகநபர் ஒருவர் மீட்டியாகொட பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம்(19) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கடந்த 2015.12.20 அன்று நவாகன்னகொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் கெப் வண்டியில் பயணித்த மூவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 19, 29 மற்றும் 33 வயதானவர்கள் எனவும், இவர்கள் இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago