Editorial / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலாத்துஓய கால்தென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள கோவிலொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 04 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, 04 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 கிலோகிரமுக்கும் அதிக எடையுடைய தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலாத்துஓயா பொலிஸார், CCTV வீடியோவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கிடைக்கப்பெற்ற தகவல்களுடன் சந்தேக நபர்கள் கொள்ளைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் ஓட்டோவை கைப்பற்றியுள்ளனர்.
அதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த ஓட்டோவில் பயணித்த நான்கு சந்தேக நபர்கள் இன்று (26) அதிகாலையாகும்போது, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 500 இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
4 hours ago
6 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
15 Nov 2025