ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீதுவைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டு விட்டு பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட பணம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
update- சீதுவை தனியார் வங்கியிலிருந்து 7 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சீதுவை பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் முகத்தை முற்றாக மூடிய வகையில் நுழைந்த கொள்ளையர்கள் இருவர் கைக்குண்டு மற்றும் துப்பாக்கியைக் காட்டி அதிகாரிகளை அச்சுறுத்தி குறித்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
37 minute ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
7 hours ago
7 hours ago