Yuganthini / 2017 ஜூலை 31 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம, புஸ்ஸலாவப் பகுதியில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றி பண்ணையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (31) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிர் இழந்த நபர் தொடர்பில் எந்ததொரு விவரமும் இதுவரை அறியப்படவில்லை.
குறித்த பண்ணைக்குள் நுழைந்து பன்றிகளைத் திருட முற்பட்ட வேளையில், பாதுகாப்பு அதிகாரியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரியை கைது செய்து, கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
9 hours ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
01 Feb 2026
01 Feb 2026