Kogilavani / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
லொறியொன்றில் இறைச்சிக்காக கொண்டுச் செல்லப்பட்ட இரண்டு பசுக்களை, அக்கரப்பத்தனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை இன்று (29) கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, பசுக்களை கொண்டுச் செல்வதற்காக பயன்படுத்திய லொறியையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
டிக்கோயாவிலிருந்து பசுமலைக்கு பயணித்த லொறியை, அல்பியன் பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார், அதில் பயணித்த இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தும்போது, அவர்கள் அனுமதிபத்திரம் இல்லாமல் பசுக்களை கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, கால்நடை வைத்தியரின் அனுமதியின்றி பசுக்களை இறைச்சியாக்க முற்றப்பட்டமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்படி இருவரையும் கைதுசெய்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026