Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருந்த சிறுமி, அவருடைய சிறிய தந்தையினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹராம, தெபருவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி சிறுமி, தன்னுடைய தாயுடன், ஹம்பேகமுவ கொட்டவேஹேரமங்கட குடாதெட்டலுவ பிரதேசத்திலுள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்கு, கடந்தவாரம் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், தகவல் தெரிந்த பொலிஸார், சந்தேகநபரை கைதுசெய்து வௌ்ளவாய பதில் நீதவான் அனுர தேசப்பிரியவின் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். அதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் கட்டளையிட்டார்.
மேற்படி சிறுமி, சந்தேநபரினால் பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், சிகிச்சைகளுக்காக, அந்த சிறுமி காலி-காரப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.
தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago