Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல கொலைகளுடன் தொடர்புடைய சரா மல்லி என்றழைக்கப்படும் சரத் பண்டார என்ற பாதாளக் குழு தலைவர் ஒருவர் பொரலஸ்கமுவையில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கட்டாரில் தங்கியிருந்து விட்டு இலங்கை வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (3) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போது தெரிவித்தார்.
சந்தேகநபர், மாகந்துர மதுஷ், அங்கொட லொக்கா உள்ளிட்ட பாதாள குழுவினருடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டு பொலரஸ்கமுவ பகுதியில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை, மத்துகம, அளுத்கம, வெலிப்பன்ன, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக, மத்துகம மற்றும் களுத்துறை நீதவான் நீதமன்றங்களில் 5 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago