Editorial / 2017 டிசெம்பர் 12 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மித்தெனிய-தலாவ பாடசாலைக்கருகில் இன்று(12) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதானவர் என மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாய் ஒன்றினால் அயல்வீட்டுக்காரருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026