Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஹமீத் அல் - ஹுசைனி கல்லூரி 3:1 என்ற கோல் கணக்கில் ஸாஹிரா கல்லூரியின் வெற்றி
கொழும்பு ஹமீத் அல் - ஹுசைனி கல்லூரிக்கும் மருதானை சாஹிரா கல்லூரிக்கும் (Hameed Al Husseinie College and Zahira College )
இடையில் சினேக பூர்வ உதைப்பந்தாட்ட போட்டி (The Heritage Derby 2025) ஞாயிற்றுக்கிழமை (10) கொழும்பு ரேஸ் கோர்ஸ் (Racecourse Ground) மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கையின் முதல் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையான ஹமீத் - அல் ஹுசைனி கல்லூரிக்கும், 133 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த மருதானை சாஹிரா கல்லூரி க்கும் இடையில் முதல் தடவையாக சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த போட்டியில் ஹமீத் அல் - ஹுசைனி கல்லூரி மூன்று கோலங்களையும் ஸாஹிரா கல்லூரி ஒரு கோலையும் போட்டது.
இதன் அடிப்படையில் இந்த வருடம் ஹமீத் அல் - ஹுசைனி கல்லூரி Heritage Derby கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
நிகழ்ச்சியின் ஆரம்ப வைபவத்தில் பிரதமர் அருணி அமரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இனி வருடா வருடம் இந்தப் போட்டி நடைபெறும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு பாடசாலைகளும் கைகோர்த்து தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பாகும்.
எம்.இஸட். ஷாஜஹான்
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago