2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

ADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது

J.A. George   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவிட் 19 இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள வணிகங்களை சீர்குலைத்த போதிலும், டிஜிட்டல் விளம்பரம் மற்றும் ஒன்லைன் மார்க்கெட்டிங் (Online Marketing) சார்ந்திருத்தல் விரைவாக வளர்ந்துள்ளது. இதேபோல், வெளிநாட்டு டிஜிட்டல் ஒபரேட்டர்களை (Digital Operators) பதிவு செய்ய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள சமூக ஊடக பயனர் பாதுகாப்பில் அதிகரித்து வரும் பரஸ்பர அக்கறை காரணமாக, இந்த முடிவு உலகளாவிய டிஜிட்டல் தளங்களை பயனர் தகவல் (user information), வணிகத் தரவு (business data) மற்றும் அழிவுகரமான மார்க்கெட்டிங் (destructive marketing) மீது படையெடுப்பதைத் தடுக்கிறது. இது நடுத்தர அளவிலான உள்ளூர் நிறுவனங்களின் (SMEs) மீதான மோசமான தாக்கத்தை தடுக்கிறது மற்றும் இந்த டிஜிட்டல் தளங்கள் வழியாக ஒரு பெரிய தொகை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்றுகிறது.

மேலும், Apple மற்றும் Facebook இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் இந்த தடுமாற்றத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. Facebook Apple’இன் புதிய iOS 14 தனியுரிமைக் கொள்கையை (Privacy Policy) தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை இயக்குவதற்கும் தங்கள் வாடிக்கையாளர்களை திறம்பட சென்றடைவதற்கும் ஒரு வணிகத்தின் திறனைக் கட்டுப்படுத்துகிறது என கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சமூக ஊடக பயனர்கள் (social media users) அவர்களை பற்றி சேகரிக்கப்பட்ட தரவுகளையும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அங்கீகரிக்க வேண்டும், எனவே iOS 14 இல் உள்ள ‘App Tracking Transparency’’ முதலில் பயனர்களிடமிருந்து அனுமதி கேட்கிறது என்று Apple பதிலளித்துள்ளது. இது Facebook’இன் வியாபாரத்தை பாதிக்கக்கூடும் என்றாலும், இந்த உலகளாவிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியமான தீர்வுகளில் ஒன்றாக ‘நிரலாக்க விளம்பரம்’ (Programmatic Advertising) கருதப்படுகிறது.

லண்டனில் ஒரு ஆராய்ச்சி கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில், 60% க்கும் அதிகமானோர் நிரலாக்க விளம்பரத்தில் திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனெனில், இது தனிப்பயனாக்கத்தை (personalization) மேம்படுத்துகிறது மற்றும் நுகர்வோருக்கு ஒட்டுமொத்த பிராண்ட் அனுபவத்தை (overall brand experience) மேம்படுத்துகிறது. சமூக ஊடக பயனர்களிடமிருந்து சம்மதம் பெறுவதை முன்னுரிமையாக்குவதன் மூலம், இங்கிலாந்தில் 4 இல் 3 நுகர்வோர் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டுகிறார்கள் மற்றும் தங்கள் ஒப்புதலைக் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

தவிர, புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை விதிமுறைகள் (updated privacy policy and regulations), பொருத்தமான உயர்தர விளம்பரங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிக்கின்றன. எனவே, விளம்பர மூலோபாயத்தில் (Online Ad Strategy) நிரலாக்க விளம்பரம் (Programmatic Advertising) பிரகாசிக்க இது சிறந்த நேரம்!

ADSTUDIO.CLOUD வழியாக ‘நிரலாக்க விளம்பரம்’ இலங்கைப் பொருளாதாரத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது உள்ளூர் வெளியீட்டாளர்களுக்கு கூடுதல் விளம்பர வருவாயை ஈட்டுகிறது. ADSTUDIO.CLOUD, இலங்கையில் 'full-stack programmatic advertising ecosystem’ மூலம் உலகளாவிய தரங்களைப் பின்பற்றும் முதல் நிரலாக்க விளம்பரத் தளமாகும். இது வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள், பிராண்டுகள் மற்றும் ஒவ்வொரு பயனரும் ஸ்மார்ட் விளம்பரக் கருவிகள் (smart advertising tools) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்களில் வருவாயை அதிகரிக்க அனுமதிக்கிறது.

ADSTUDIO.CLOUD இன் புரட்சிகர ‘all-in-one ecosystem’ அமைப்பு பல விளம்பரதாரர்கள், 250+ வெளியீட்டாளர்கள் (பிரதான, பிராந்திய மற்றும் முக்கிய வெளியீடுகள் உட்பட) மற்றும் பல்வேறு தொழில்களில் உள்ள பிராண்டுகளை இணைக்கிறது. இன்றுவரை, ADSTUDIO.CLOUD உள்ளூர் வெளியீட்டாளர்களுக்கு Rs 28 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தியுள்ளது மற்றும் வங்கி, தொலைத்தொடர்பு, கல்வி, FMCG, நுகர்வோர் மின்னணுவியல் (consumer electronics), டிஜிட்டல் மீடியா மற்றும் விளம்பர முகவர் நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது.

ADSTUDIO.CLOUD’இன் மற்றொரு சாதனை 2020 செப்டெம்பரில் நடைபெற்ற ‘Programmatic Colombo Program’ ஆகும். இது இலங்கையில் நடைபெற்ற இந்த வகையின் முதல் நிகழ்வாகும். மேலும், நிரலாக்க விளம்பரம் மற்றும் தொடர்புடைய களங்களில் தொடர்ச்சியான அறிவுப் பகிர்வு நடத்த Matt Prohaska (USA) கலந்து கொண்டார்.

2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ADSTUDIO.CLOUD, ‘Digi-inspired solutions’ மற்றும் ‘Artificial Intelligence' (AI) backed data-driven platforms’ வழியாக நிரலாக்க விளம்பரத்தின் உண்மையான சக்தியைப் பயன்படுத்தும் ஒரு AdTech நிறுவனம் ஆகும். வெளியீட்டாளர்களுக்கு வருவாயை அதிகரிக்கவும், சரியான பார்வையாளர்களை சரியான தளங்களில் சரியான நேரத்தில் குறிவைப்பதன் மூலம், SMEs பல மடங்கு பயனடைந்துள்ளன.

மூன்று மொழிகளிலும் உள்ளூர் வெளியீட்டாளர்களுக்கு 1 பில்லியனுக்கும் அதிகமான பதிவுகளை வெற்றிகரமாக உருவாக்கியிருப்பது ADSTUDIO.CLOUD இன் ‘result-oriented advertising’க்கு ஒரு சான்றாகும். பயனுள்ள எதிர்கால மாற்றத்தை உண்டாக்குவதற்கான ஒரு தொழில்துறை தலைவராக, ADSTUDIO.CLOUD வெளியீட்டாளர்களுக்கான டிஜிட்டல் வருவாயை அதிகரிக்கவும், பிராண்டுகளை இலக்கு சந்தைகளுடன் (target markets) இணைக்கவும் மற்றும் விளம்பரதாரர்களை நம்பிக்கையுடன் அதிக வருவாய் விளம்பர பிரச்சாரங்களை (online advertising campaigns) தொடங்கவும் ஒரு ஊக்கியாக உள்ளது.

மேலும் தகவலுக்கு, www.adstudio.cloud ஐ பார்வையிடவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X