Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 25 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய காலத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும் சினிமா உலகமும் நகமும் சதையும் போல மாறிவிட்டது.
தமிழ் திரையுலகில் பெரும்பாலான நடிகர்கள் டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகாரபூர்வ பக்கங்களை வைத்துள்ளனர். அண்மையில்தான் உலகநாயகன் கமல்ஹாசன், டுவிட்டரில் இணைந்துகொண்டார்.
இதுவரைகாலமும் டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த நடிகர் காரத்தி, அண்ணனான நடிகர் சூர்யா டுவிட்டரில் இணைந்த சில மாதங்களின் பின்னர் நேற்று முதல் டுவிட்டரில் கணக்கு ஆரம்பித்துவிட்டார். கார்த்தியின் பெயரில் ஏற்கெனவே பல போலி கணக்குகள் டுவிட்டரில் உள்ளன.
இதேவேளை, நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். பிறந்தநாள் பரிசாக காஷ்மோரா திரைப்படத்தின் முதற்பார்வை, இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாகவும் அதனை தனது அதிகாரபூர்வு டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கார்த்தியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு இது தான்.@Karthi_Offl
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .