Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர், நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடித்த கன்னத்தில் முத்திமிட்டால் திரைப்படத்தில், அவர்களின் மகள் அமுதாவாக நடித்தார்.
அந்தத் திரைப்படத்துக்குக்காக, கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
கீர்த்தனா வளர்ந்த பிறகு, ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் அவரோ, கமெராவுக்கு முன்பு அல்ல பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டார். தனது நடிப்புத் திறமையை, உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய மணிரத்ணத்திடமே, கீர்த்தனா, உதவி இயக்குநராக சேர்ந்தார். எந்த கிசுகிசுக்கள், சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தனாவுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி, சென்னையிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளதாம். திருமணத்துக்கான அழைப்பிதழ்களை வழங்கும் வேலையில் பிசியாக உள்ளார் பார்த்திபன்.
கடந்த சில நாட்களாக, பார்த்திபன் பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவர் எதற்காக அனைவரையும் சந்தித்து வருகிறார் என்பதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago