Editorial / 2018 ஜூலை 02 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் இரசிகர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, 'எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் அழைப்புக்கு தளபதி விஜய் தொலைபேசி ஊடாகநன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி, கமல் இரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில் கமலுக்கு நன்றி கூறியதன் மூலம் விஜய் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025