2025 மே 14, புதன்கிழமை

அறுவை சிகிச்சை செய்ய அனுஷ்கா மறுப்பு

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவரவர்க்கு ஆயிரம் கவலை... நடிகை அனுஷ்காவுக்கு இப்போது அவரது உடல் எடைதான் அதிகக் கவலையாம்.

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் ஏன் தான் நடித்தோமோ என அனுஷ்கா இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

அந்த திரைப்படத்துக்காக குண்டான பெண்ணாக மாறிய அனுஷ்கா, சுமார் ஒரு வருட காலம் ஆன பிறகும் இன்னும் பழைய நிலைக்கு மாற முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகளை அதற்காகவே இன்னும் காட்சிப்படுத்தாமல் இருந்து வருகிறாராம் இயக்குநர் ராஜமௌலி.

இயற்கையாகவே உடல் எடையைக் குறைத்து விடுகிறேன் என அனுஷ்கா சொன்னதால் காத்துக் கொண்டிருந்தார் ராஜமௌலி. ஆனால், இத்தனை மாதங்களாகியும் அனுஷ்காவால் உடல் எடையை முழுமையாகக் குறைக்க முடியவில்லை.

கடுப்பான ராஜமௌலி 'அறுவை சிகிச்சை செய்தாவது உடல் எடையைக் குறையுங்கள்' என கேட்டுக் கொண்டாராம். ஆனால், பக்க விளைவுகளுக்குப் பயந்து கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மறுத்துவிட்டாராம் அனுஷ்கா.

திட்டமிட்டபடி திரைப்படத்தை வெளியிட முடியாத ஒரு சூழ்நிலையில்தான் ராஜமௌலி அப்படி சொன்னார் என்கிறார்கள். அனுஷ்கா அடுத்தடுத்து சரித்திர திரைப்படங்களில் நடிப்பதால் இன்னும் ஒரு மாதத்துக்குள் எப்படியாவது உடல் எடையைக் குறைத்துவிடுகிறேன் என ராஜமௌலியிடம் 'டைம்' கேட்டுள்ளாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .