2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரசிகர்களுக்காக... கஷ்டத்தை தாங்கும் அனுஷ்கா

George   / 2016 ஏப்ரல் 18 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் இரசிகர்களுக்காக அதனைப் பொறுத்துக் கொள்கின்றேன்' என்று  நடிகை அனுஷ்கா கூறினார்.

பாகுபலி திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தில் இளவரசி வேடத்தில் அனுஷ்கா நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.

இது பற்றி அனுஷ்கா கூறும்போது, 'கிரீடம், அதிக எடையில் நகைகள், மன்னர் காலத்து உடைகள் அணிந்து மேக்கப் போட்டுக்கொண்டு இந்த கொளுத்தும் வெயிலில் நடிப்பது கஷ்டமாக இருக்கிறது. குதிரை சவாரி செய்வது, வாள் சண்டை போடுவது என்றும் நடிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வரும்போது இரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை நினைத்து கஷ்டத்தை பொறுத்துக் கொள்கிறேன். 

கவர்ச்சியாக சாதாரண பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை சிங்கம்-3 திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடக்கிறது. அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய திரைப்படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறேன்' என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .