2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இரண்டுக்கு முடியாது...

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷாலுடன் மருது திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது 'காஷ்மோரா', 'சங்கிலி புங்கிலி கதவ தொற' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி நடிக்கும் 'காஷ்மோரா' திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா கமிட்டானபோது, நயன்தாரா மட்டும்தான் அந்த திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதனால், ஸ்ரீதிவ்யா இரண்டாவது நாயகியாக கமிட்டானார்.

ஆனால், அதையடுத்து இன்னொரு நாயகியாக மனீஷா யாதவும் அந்தத் திரைப்படத்தில் இணைந்தார். இதனால், மூன்று நாயகிகள் உள்ள திரைப்படத்தில் வந்து சிக்கிக்கொண்டோமே என்று அதிருப்தி மனநிலையுடன் இருந்தார் ஸ்ரீதிவ்யா. இப்போது, ஜீவாவின் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், அவர் காஷ்மோரா திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பதை அறிந்த சில இயக்குநர்கள், இரண்டாவது நாயகியாக நடிப்பதற்கு, ஸ்ரீதிவ்யாவை அழைக்கின்றார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அவர், 'காஷ்மோரா திரைப்படத்தில் நயன்தாரா இருந்தபோதும், நானும் அவருக்கு இணையான இன்னொரு நாயகியாகத்தான் நடிக்கிறேன். இதில் 3 கதாபாத்திரங்களில் நடிக்கும் கார்த்திக்கு, நானும் ஒரு ஜோடியாக நடித்துள்ளேன்' என்று கூறியுள்ளாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X