Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சக்ரா' மற்றும் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதில் 'சக்ரா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
'துப்பறிவாளன் 2' படத்தை விஷாலே நடித்து, தயாரித்து இதர காட்சிகளை இயக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, நடிக்க பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டிருந்தார். அதில் ஆனந்த் ஷங்கர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்கத் திட்டமிட்டார்.
இதில்தான் ஆர்யா வில்லனாக நடிப்பதாக இருந்தது. இமான் இசையமைப்பாளராக பணிபுரியவிருந்தார். இந்தப் படத்தின் பொருள் செலவு அதிகமாக வரவே, பலரும் இதைத் தயாரிக்கத் தயக்கம் காட்டினார்கள்.
இதனால், இந்தக் கதையை வேறு நாயகர்களை வைத்துப் பண்ணலாம் என்று திட்டமிட்டார் ஆனந்த் ஷங்கர். இதற்காக பல்வேறு முன்னணி நாயகர்களை
அணுகினார். இறுதியாக இந்தக் கதையைக் கேட்ட வினோத் குமார், இதை நானே தயாரிக்கிறேன் என்று முன்வந்துள்ளார்.அதுவும், விஷால் - ஆர்யாவே நடிக்கட்டும்
என்று தெரிவிக்கவே படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
34 minute ago
42 minute ago