Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 19 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணத்துக்கு பிறகும் கலைச்சேவையை தொடர்ந்து வரும் அமலாபால், தமிழில் பசங்க-2, அம்மா கணக்கு போன்ற படங்களில் நடித்தவர். மலையாலத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார். ஷாஜகானும் பரிகுட்டியும என்ற படத்தில் மீண்டும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
தமிழில் கூட தனுஷின் வடசென்னை படத்தில், அவரும் ஒரு கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஹெப்புலி என்ற கன்னட படத்திலும் நடித்துக்கொண்டிருக்கின்றார். ஆக, ஒரு எல்லைக்கோடு வைத்து அதற்கேற்ற கதைகள், கதாபாத்திரங்களாக செலக்ட் பண்ணி நடிப்பை தொடர்ந்து வருகின்றார் அமலாபால்.
மேலும், அவரது உடல்கட்டும் திருமணத்துக்கு பிறகு எந்தவித மாற்றம் இல்லாமல் அப்படியே இருப்பதால், அமலாபாலை நடிக்க வைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றார்.
அத்தோடு, அவர் நடிப்பின் ஆரம்ம காலத்தில் எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ, அதே ஆர்வத்தை இப்போதும் வெளிப்படுத்தி வருகின்றார். குறித்த நேரத்தில் ஸ்பாட்டில் ஆஜராகிவிடுபவர், இயக்குநர்களிடம் டயலாக் பேப்பரை வாங்கி எந்த மாதிரி பர்ஃபோமன்ஸ் செய்யலாம் என்று உள்வாங்கிக்கொண்டு கமரா முன்பு வருகின்றாராம்.
12 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
36 minute ago
42 minute ago