Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 01 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, நாக ஷவுரியா, பேபி வெரொனிகா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தியா'. இந்நிலையில் 'தியா' என்னுடைய கதை. அதை திருடிவிட்டார்கள் என உதவி இயக்குனர் சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில், இயக்குநர் விஜய், விகடன் சினிமாவுக்கு கருத்து வெளியிடுகையில் ''நான் இந்தக் கதைக்கான தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் 2013ஆம் ஆண்டிலேயே பதிவு செய்துவிட்டேன். இந்தக் கதையை லைகா நிறுவனம் தயாரிப்பதாக உறுதியளித்துவிட்டது. இது என் சொந்தக் கதை. எனினும் சந்திரகுமார் 2015இல்தான் கதை எழுதியதாகக் கூறுகின்றார். இது எந்த விதத்தில் நியாயம்? இவர்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவிருக்கின்றேன்" எனக் கூறியுள்ளார்.
இதுத் தொடர்பில் தி ஹிந்து தமிழ் இணையதளத்துக்கு கருத்து தெரிவித்திருந்த உதவி இயக்குனர் சந்திரகுமார் ''நான் இயக்குனர் ராஜகுமாரனிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவன். கருக்கலைப்பு என்பது பாவச்செயல் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கருவிலேயே அழிந்த பிறக்காத ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தன்னை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறது என்று படம் நகரும் விதத்தில் 2015ஆம் ஆண்டில் கதை எழுதினேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago