Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல், நடிகர் கமலுடன் வாழ்ந்த நடிகை கௌதமி, கமலிடமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “கமல் ஹாசனும் நானும் பிரிந்துவிட்டோம்” என்ற கௌதமியின் அறிவிப்பு, திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“குருசிஷ்யன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான கௌதமி, 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற வட இந்தியரை திருமணம் செய்து கொண்டார்.
சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தைக்கும் தாயான கௌதமி, திருமணமான அடுத்த ஆண்டு, அதாவது 1999 ஆம் ஆண்டிலேயே சந்தீப்பை விவாகரத்து செய்தார். கணவரை விவாகரத்து செய்த கெளதமி, சில வருடங்களுக்குப் பிறகு கமலுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். கமல் ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில், கமலின் திரைப்படத் தயாரிப்பில் உறுதுணையாக இருந்தார். “தசாவதாரம்”, “தூங்காவனம்” உட்பட கமல் நடித்த பல திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றிய கெளதமி, “பாபநாசம்” திரைப்படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடித்தார்.
கமல், தற்போது நடித்து வரும் “சபாஷ் நாயுடு” திரைப்படத்தில் கெளதமி, ஆடை வடிமைப்பாளராக பணியாற்றி வரும்நிலையில், கமலை பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார் “நானும், கமல் ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தொடங்கி, “கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது” என அறிவித்துள்ளார்.
கமல் - கௌதமி பிரிந்ததுக்கு காரணம் என்ன என்று விசாரித்தால், பலரும் “சுருதி ஹாசன்தான் காரணம்” என்கின்றனர். பல விடயங்களில் சுருதி ஹாசனுக்கும், கௌதமிக்கும் ஒத்துப்போகவில்லையாம். அதனால்தான், மும்பையில் செட்டிலானாராம் சுருதி ஹாசன். படப்பிடிப்புக்காக சென்னைக்கு வரும்போது கூட, தன் அப்பா கமலுடைய வீட்டுக்கு வராமல் ஹோட்டலில்தான் தங்கி வந்தார்.
இதன் உச்சகட்டமாக “சபாஷ் நாயுடு” படப்பிடிப்பு, அமெரிக்காவில் நடைபெற்றபோது கௌதமியுடன் கடும் தகராறில் சுருதி ஹாசன், ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது மகளை கமல் கண்டிக்கவில்லை என்ற கோபத்தில் கமலைவிட்டு விலகிய கௌதமி, தனியாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டது. அந்த தகராறு இப்போது வீதிக்கு வந்துவிட்டதாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
1 hours ago