Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூலை 11 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுபேரனும், கெவின் நிறுவன இயக்குனர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதிகள் மகனுமான மனு ரஞ்சித்துக்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர்.
இந்த திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட விக்ரமுக்கு மிக நெருக்கமான நண்பர்களும், மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர்களும், மணமகள் அக்ஷிதாவின் தோழிகளும், மணமகன் மனு ரஞ்சித்தின் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமண திகதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்தை தி.மு.கழக தலைவர் கருணாநிதி நடத்தி வைக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago