Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 22 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர்களின் சம்பளத்தைக் குறைத்தால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது’ என சிம்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குனர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு கலந்து கொண்டார்.
இயக்குனர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினர் என்பதால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய சிம்பு, “தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது.
நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் நாயகனுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
11 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
57 minute ago
1 hours ago