J.A. George / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.
தெலுங்கில் பிரபாஸ், ஹிந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இதைத்தொடர்ந்து இவர் சல்மான் கான் தயாரிக்கவுள்ள இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவும் நடிகர் சல்மான் கானும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்துள்ளதாகவும் இப்போது இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவதாகவும் செய்தி பரவி வருகிறது.
எனினும் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான் கான் தரப்பில் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago