Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம், நடன நிகழ்ச்சி ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து, அதற்கான டிக்கெட் விற்பனையிலும் ஈடுபட்டு வந்தது.
இது தொடர்பில், அந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில், பிரபல நடிகை சன்னி லியோனும் ஆடுவார் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால், டிக்கெட் விற்பனையும் அமோகமாக நடந்து, ஒரு சில நாட்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்துக்குள் சன்னி லியோன் வந்து கவர்ச்சி நடனம் ஆடக்கூடாது. அது, கர்நாடக கலாசாரத்தைச் சிதைக்கும். அதனால், இந்த நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என்று, சில கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து சன்னி லியோனின் நடனத்துக்கு, கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சன்னி லியோன் நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
14 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago