Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ஆர்யா குறித்த கல்யாணப் பேச்சு, பல வருடங்களாக இவரது சர்ச்சையாகவே இருந்து கொண்டிருந்தது. அந்த சர்ச்சைக்கு இந்த வருடம் மார்ச் மாதம் மாதம் முற்றுப் புள்ளி வைத்து நடிகை சாயிஷாவை மணந்தார்.
தமிழில் "வணமகன்", "கடைக்குட்டி சிங்கம்", "ஜூங்கா" போன்ற படங்கில் நடித்தவர் சயிஷா. இவர் "கஜினிகாந்த்" என்ற படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அப்பொழுதுதான் ஆர்யா சயிஷா மீது காதல் வயப்பட்டார்.
காதல் திருமணம் நடந்த சுவாரசியமான தகவலைப் பற்றி ஆர்யா, காப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டின் பொழுது பேசினார்.
சூர்யாவின் காப்பான் பட ஷூட்டிங்கில் ஆர்யாவும் சயிஷாவும் ஒன்றாக இருக்கும்போது கூட படக்குழுவினருக்கு எதுவும் தெரியாதாம். அந்த அளவிற்கு அவர்களது காதலை ரகசியமாக பொத்தி பாதுகாத்து வந்துள்ளனர்.
காதல் ரகசியம் எப்படி பாதுகாக்கபட்டது என மேடையில் ஆர்யா கூறுகையில், "நான் என் காதலை முதலில் சயிஷாவிடம் தெரிவிக்கவில்லை. இதற்குமுன் நான் பெண்களிடம் நேரடியாக காதலைச் சொல்லி அது பலமுறை தவறாக போயுள்ளது.
அதனால் சயிஷாவை காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லாமல் அவரது அவரது அம்மாவிடம் தான் சொன்னேன்" அதற்கு பிறகு தான் சாயிஷாவுக்கு தெரியும் என்று ஆர்யா நகைச்சுவையாக தெரிவித்தார்.
சாயிஷா ஆர்யா பேச்சை ரசித்துக்கேட்டுக் கொண்டிருந்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago