Freelancer / 2022 ஜூன் 17 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறுவர்களைக் அழைத்துச்செல்லுமாறு அந்த சங்கம் பெற்றோர்களிடம் கோரியுள்ளது.
மருந்து தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களை அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்ல பெற்றோர்கள் பின்வாங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில், சிறந்த சத்தான உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (a)
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago