2025 மே 22, வியாழக்கிழமை

சிங்கிள் அஞ்சலி

Gavitha   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சித்தியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, சென்னையை விட்டு ஆந்திராவில் செட்டிலாகி விட்டார். ஆனபோதும், அந்தபிரச்சினைக்கு பிறகு சென்னைக்கு வந்தால் சித்தியுடன் தேவையில்லாத மோதல்கள் ஏற்படும் என்று, வருவதையே தவிர்த்து வந்தார் அஞ்சலி. அதையடுத்து சூர்யாவுடன் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடுவதற்கு  அவுட்டோருக்கு வந்தபோது தனது பாதுகாப்புக்காக சில நபர்களை அழைந்து வந்தார் அஞ்சலி.

ஆனால் தற்போது யாரையும் உடன் அழைத்து வருவதில்லை. தனது உதவியாளரான ஒரு பெண்ணை மட்டுமே சென்னைக்கு அழைத்து வருகின்றார். இதுபற்றி அஞ்சலி கூறும் போது, 'நான் ஆந்திரா பெண்ணாக இருந்தாலும் என்னை வளர்த்தது தமிழ் சினிமாதான். அந்த வகையில் இங்கு எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். அதனால் சென்னை எனது சொந்த ஊர் மாதிரிதான். எனக்கு இங்கு நல்ல பாதுகாப்பு இருக்கின்றது. அதனால் நான் மட்டும் தனியாக படப்பிடிப்புக்கு வந்து செல்கின்றேன்' என்றாராம் அஞ்சலி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X