2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தமன்னாவுக்கு கதவடைப்பு

George   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகுபலி என்ற, மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த தமன்னாவுக்கு, ஆந்திராவில் இப்போது, போதிய வரவேற்பு இல்லை. 

மகேஷ் பாபு, பிரபாஷ், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் போன்ற, தெலுங்கின் முக்கிய ஹீரோக்கள் எல்லாம், தமன்னாவுடன் நடிப்பதற்கு தயங்குவது தான் இதற்கு காரணம். 

தமன்னா பெயரை கூறினாலே, தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இதற்கான காரணம் தெரியாமல் குழம்பி தவிக்கிறார் தமன்னா. 

சினிமாவுக்கு வந்த புதிதில், தன்னை கை கொடுத்து தூக்கி விட்ட தெலுங்கு தேசம் இப்போது கைவிட்டது ஏன் என புலம்புகிறார். தெலுங்கு ஹீரோக்களோ, 'அந்த பொண்ணு, நடிக்க வந்து, ரொம்ப நாளாகி விட்டது. அவருடன் நடித்து, எங்களுக்கு போரடித்து விட்டது. ரசிகர்களுக்கும், தமன்னாவை போரடித்து விட்டது. அதனால் தான், இந்த கதவடைப்பு' என்கின்றனர். 

இது மட்டும் தமன்னாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும்???

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X